கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை நித்யா மேனன்?

actress nithya menen pregnant- கர்ப்பிணி பெண்ணாக காட்சி தரும் தனது புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

Update: 2022-11-19 07:14 GMT

actress nithya menen pregnant- கர்ப்பிணி பெண்ணாக காட்சி தரும் புகைப்படங்களில் நடிகை நித்யா மேனன்.

actress nithya menen latest instagram post, actress nithya menen pregnant- தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.


180 படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவர், வெப்பம், மாலினி 22 பாளயங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். லிவ்-இன் வாழ்க்கையை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' இவருக்கும் பெரிய கவனத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நடிப்பில் வெளியான சைக்கோ, மெர்சல், காஞ்சனா -2 பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.


இந்த ஆண்டு தெலுங்கு மொழியில் பீம்லா நாயக், தமிழில் திருச்சிற்றம்பலம், மலையாள மொழியில் 19 (1) (a) ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த படங்களில் இவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. நல்ல நடிப்பை தந்திருந்தார். அந்தந்த கேரக்டர்களை முழுமையாக உள்வாங்கி நடித்திருந்தார். பல நடிகைகள் கவர்ச்சியை நம்பி மட்டுமே, சினிமாவில் நடிக்கும் நிலையில், தனது அபார நடிப்பாற்றலால் நிலைத்து நிற்கும் நடிகையர் வெகு சிலரே. அதில், நித்யாமேனன் குறிப்பிடத்தக்கவர். சைக்கோ, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில், தனது சிறப்பான நடிப்பை அவர் தந்திருந்தார். 

இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் நித்யா மேனன், அடிக்கடி தனது பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் இருப்பது போன்ற தனது புகைப்படங்களை நித்யாமேனன் வெளியிட்டுள்ளார். திடீரென இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.


நித்யா மேனனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் 'லைக்'குகளை அள்ளி வருகிறது. 'வொண்டர் வுமன்' படத்தில் 'நோரா' கதாபாத்திரத்தின் போட்டோவை பகிர்ந்து, 'நோரா' கதாபாத்திரத்திரம், தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என பதிவிட்டுள்ளார். மேலும் தான் கர்ப்பமாக இல்லை என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில், இதுபோன்ற ஆச்சரியமான, அல்லது கவனிக்கத்தக்க புகைப்படங்களை நடிகர், நடிகைகள் வெளியிடுவது ஒருவிதத்தில் அவர்கள் நடிக்கும் படங்கள் குறித்து, ரசிகர்களுக்கு தெரிவிக்கும் ஒரு விளம்பர யுக்தியாக கூட இருக்கிறது. 


அஞ்சலி மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வொண்டர் வுமன்' சோனிலிவ் தளத்தில் நேரடியாக டிஜிட்டல் பிரீமியர் முறையில் நவ.18 (நேற்று) முதல் ஒளிபரப்பாக உள்ளது, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும்  ஆஷி துவா சாரா இப்படத்தை தயாரித்துள்ளனர். நடிகைகள் நதியா, நித்யா மேனன், பார்வதி திருவொத்து, பத்மப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Tags:    

Similar News