நடிகை குஷ்பூ மருத்துவமனையில் சிகிச்சை.. ரசிகர்களுக்கு டுவிட்டரில் பதில்

Kushboo Admitted in Hospital - நடிகை குஷ்பு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-06 06:25 GMT

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படம்.

Kushboo Admitted in Hospital -நடிகை குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1989ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். ரிக்சா மாமா, சின்ன தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் வாங்கினார்.

கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதங்களுக்கு முன் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியிருந்தார். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் 20 வயது குறைந்தது போல தெரிகிறார் என கமெண்ட் செய்து வந்தனர். இதனையும் தாண்டி ஒருவர், குஷ்புவின் மகளோ என கூறும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வந்தது.

குண்டாக இருந்த குஷ்பு, கடந்த ஆண்டு ஸ்லிம்மான தோற்றமாகி எல்லோருக்கும் அதிர்ச்சியளித்தார். அவர் உடல் எடையை குறைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர். அவரிடம் எப்படி குறைத்தீர்கள் என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, தான் தினமும் வாக்கிங் சென்றதாகவும், அதன் மூலமே உடல் எடையை குறைத்ததாகவும் கூறினார். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கினார்.

kushboo in hospital 

அடிக்கடி லண்டனுக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டிருந்த நிலையில் புதிய வீட்டில் இருந்து எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், லண்டனில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதை மகிழ்ச்சியோடு அறிவித்திருந்தார். குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கி உள்ளதாகவும், அங்கே பால் காய்ச்சி முதன் முதலாக போட்ட டீயை குடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் குஷ்பு பாஜக கட்சியில் உள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுபோல் படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் பீதியுடன் இருந்தனர். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறியளவில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், 2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் என தெரிவித்திருந்தார். மேலும் ஓய்வுக்குபின் மீண்டும் பணியை தொடர்வேன். தாமதமாக கூறியதற்கு மன்னிக்கவும் என தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு தனது விஜயதசமி, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளவாதகவும் அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் மீண்டும் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகளை கூறி வருகின்றனர். 




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News