கார்டியன் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் மிரட்டும் பர்ஸ்ட் லுக்

Guardian First Look -கார்டியன் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டும் வகையில் உள்ளது.

Update: 2022-10-26 07:22 GMT

Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieநடிகை ஹன்சியாக மோத்வானியின் கார்டியன் படத்தில் வெளியிடப்பட்டுள்ள பர்ஸ்லுக் போஸ்டர்

Guardian First Look -நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து வரும் ஃபேண்டஸி திரில்லர் கார்டியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.


Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieதமிழ் திரை உலகில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. மும்பை வரவான இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கி வந்த குஷ்பு போல் புஷ்டியாக இருந்ததால் சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்டார். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றதால் ஏராளமான படங்களில் நடிக்க தொடங்கினார்.

Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieஒரு கட்டத்தில் அவரது உடல் எடை கூடிக் கொண்டே சென்றதால் அவரது மார்க்கெட் கொஞ்சம் சரிந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிக ஆர்வம் காட்டினார். தற்போது ஹன்சிகா மோத்வானி இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieஇதற்கு முன்னதாக திரைப்பட இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள எம்ஒய்3 வெப் சீரிஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாக உள்ளது. மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர், உலக சாதனை முயற்சியாக ஒரே சாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹன்சிகா மோத்வானி நடித்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieஇந்நிலையில் இயக்குனர் ஜே.எம். ராஜா சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ஹன்சிகா, இயக்குனர் விஜய் சந்தரின் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பில் இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieஇதனைத் தொடர்ந்து ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் இப்படத்திற்கு கார்டியன் என பெயரிடப்பட்டுள்ளது. சாம் சி. எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகாவின் கார்டியன் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இவர் ஹன்சிகா மோத்வானி தானா என வியக்கும் அளவிற்கு அவரது உருவ அமைப்பு உள்ளது என ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

Guardian First Look, hansika new movie 2022, hansika motwani horror movieஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அவருடைய திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது என்பது ஏற்கனவே வந்த தகவல். இதற்காக 450 ஆண்டுகள் பழமையான அந்த அரண்மனையை புதுப்பிக்கும் பணியும் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ‌



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News