நடிகர் வடிவேலு தாயார் மறைவு

Actor Vadivelu mother RIP- நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி, உடல் நலக்குறைவால் காலமானார்.

Update: 2023-01-19 06:56 GMT

Actor Vadivelu mother RIP- வடிவேலு தாயார் காலமானார். (கோப்பு படம்)

comedy actor vadivelu mother passed away, Actor Vadivelu mother RIP- நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (என்கிற) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் மீண்டும் 'கம்பேக்' கொடுத்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.


தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மாமன்னன்' படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் வடிவேலு. மேலும் பி.வாசு இயக்கி வரும் 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் 'கமிட்' ஆகி உள்ளார்.

இவ்வாறு மீண்டும் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கி, வடிவேலு 'பிஸி'யாக நடித்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா காலமானார். அவருக்கு வயது 87. மதுரை வீரகனூரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.


நடிகர் வடிவேலு, படங்களில் அம்மாவை மதிக்காத மகன் போல, படத்துக்கான கேரக்டரில் அப்படி நடித்தாலும், உண்மையில் அவர் தாய்ப்பாசம் மிக்கவர். டிவி நேர்காணல்களில் பலமுறை பங்கேற்ற அவர், தனது குடும்பத்தை பற்றி, தனது தாய் வைத்தீஸ்வரியை பற்றி மிக பெருமையாக, உருக்கமாக பேசுவார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு டிவி சேனலில் பேட்டியளித்த வடிவேலு, இளையராஜா பாடிய, என்னை பெத்த ஆத்தா, கண்ணீரை தான் பார்த்தா' என்ற பாடலை கேட்டு, கண்கலங்கி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நகைச்சுவை நடிப்பால், நளினமான உடல் மொழியால், பாசாங்கற்ற பேச்சால் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் வடிவேலு. இப்போது, முதுமை காரணமாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது தாயார் மறைந்திருக்கிறார். தமிழக மக்களை எல்லாம் தன் நகைச்சுவை நடிப்பால், சந்தோஷப்படுத்திய ஒரு சினிமா கலைஞன் வடிவேலு, இன்று பெற்ற தாயை இழந்து கண்ணீர் வடிப்பது, அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.  சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆறுதலை, நடிகர் வடிவேலுவுக்கு தெரிவித்து வருகின்றனர். பிரபல முன்னணி நடிகர்கள், அவருடன் நடித்த சக நடிகர்கள், வடிவேலுவுக்கு நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர்.   ஆனால், தனது ஆற்றல் மிக்க நடிப்பால் பல ஆயிரம் தாய்மார்களின் அன்பை வடிவேலு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News