சேந்தமங்கலத்தில் பெண் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது..!

சேந்தமங்கலத்தில் பெண் போலீஸ்   எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது..!

கோப்பு படம் 

சேந்தமங்கலத்தில் பெண் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் :

சேந்தமங்கலத்தில் பெண் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ், ஏட்டு ரஞ்சிதா ஆகியோர் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வடுகப்பட்டி, உப்பிலியப்பர் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பவர், மது அருந்திவிட்டு டூ வீலரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அந்த வாகனத்தை நிறுத்தி அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது, போலீசாரை எதிர்த்து பேசிய மணிவண்ணன், தனது சகோதரரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான செல்லமுத்துவுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த செல்லமுத்து போலீசாரை மிரட்டல் விடுத்து தரக்குறைவாக பேசினார். அவர்களை பெண் போலீஸ் எஸ்.ஐ. பிரியா எச்சரித்தார். அவரையும் செல்லமுத்து மிரட்டினார். இதையொட்டி எஸ்.ஐ பிரியா அளித்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போன்ற அடிமட்ட அரசியல்வாதிகளால்தான் ஒரு கட்சிக்கு அவப்பெயரும் கட்சி மீதான நம்பிக்கையும் போகிறது. அதனால் எந்த கட்சியாக இருந்தாலும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் அரசியல் அதிகாரம் செய்யக்கூடாது என்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் அறிவுறுத்தவேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story