ஜெயம் ரவி விவாகரத்து...! அப்ப எல்லாத்துக்கும் மாமியார்தான் காரணமா?

ஜெயம் ரவி விவாகரத்து...! அப்ப எல்லாத்துக்கும் மாமியார்தான் காரணமா?
X
நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்திதான் கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக்காக பரவி வருகிறது.

ஜெயம் ரவி விவாகரத்து | Jayam Ravi Aarthi Divorce

நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்திதான் கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக்காக பரவி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருந்ததிலிருந்தே இப்போது வரை பெரிய கிசு கிசு எதிலும் மாட்டாமல் இருந்து வந்தார் ஜெயம்ரவி.

ஜெயம் ரவி குறித்து நடிகைகள் பேசும்போதும் அவர் மிகவும் ஜென்யூனான நபர் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு பெயர் வாங்கியவர், இப்போது விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இதுதான் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஜெயம் ரவியின் தந்தை என முதலில் பேசப்பட்டது.

இந்நிலையில், மொத்த பிரச்னைக்கும் காரணம் ஜெயம் ரவியின் மாமியார் அதாவது ஆர்த்தியின் அம்மாதான் என்பது தற்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் செய்தியாகும்.

நடிகர்கள் தனுஷ், ஜிவி பிரகாஷ் ஆகியோர் அடுத்தடுத்து விவாகரத்து செய்த நிலையில், தற்போது ஜெயம் ரவி குறித்தும் விவாகரத்து செய்தி பரவி வருகிறது. இதற்கு காரணம் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் என்கிறார்கள்.

சுஜாதா விஜயகுமார் பிரபலமான தயாரிப்பாளர். அவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் மருமகனை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். இயல்பிலேயே கொஞ்சம் கறார் பேர்வழி என்பதால் இவரை பல விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்காமல் இருக்கிறதாம்.

சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படத்தையும் சுஜாதாதான் தயாரித்திருந்தார். அந்த படத்திலும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உண்டு என்பதால் தயாரிப்பாளருக்கு எதிராக சில புரளிகளைக் கிளப்பி விட்டனர்.

இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்த படத்துக்கு ஜெயம் ரவிக்கு 25 கோடி சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் வரவே, அதை கொடுக்க மனம் இன்றி தவிர்த்துள்ளார் சுஜாதா விஜயகுமார். இதில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மருமகனிடம் நேரடியாக கூறாமல், பாண்டியராஜ் மூலமாக இந்த விசயம் ஜெயம் ரவி காதுக்கு வர, இதனால் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. சுஜாதா விஜயகுமாரைப் பொறுத்தவரையில் மருமகனுக்கு செய்வதில் பிரச்னையில்லை என்றாலும் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து அது தோல்வியடைந்தால் மீண்டும் தயாரிப்பு பக்கமே தலைவைத்து படுக்கமுடியாத சூழல் என்று வருந்துகிறாராம்.

ஆனால் இதுபுரியாமல், ஆர்த்தி ஜெயம் ரவியிடம் கோபப்பட, பதிலுக்கு மாமியார் மீதான வருத்தத்தை கடுமையாக மனைவி மீது சாட பிரச்னை அப்போதே துவங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.

Tags

Next Story