/* */

நாமக்கல் தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கு குலுக்கல் முறையில் அலுவலர்கள் தேர்வு

நாமக்கல் தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கு கணினி குலுக்கல் முறையில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கு குலுக்கல் முறையில் அலுவலர்கள் தேர்வு
X

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான அலுவலர்கள் கணினி முறையில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஓட்டும் எண்ணும் பணிக்கு, ஆட்சியர் உமா முன்னிலையில், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

,நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கான அலுவலர்கள் முதற்கட்டமாக கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள், வருகிற ஜூன் 4ம் தேதி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களை கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், , ப.வேலூர், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற ஓட்டுப்பதிவின்போது, பதிவான ஓட்டுகள் அடங்கிய வாக்குப்பதிவு மெசின்கள், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் ஆகியவை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், ஓட்டு எண்ணும் மையத்தில், 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வரும், ஜூன், 4ம் தேதி பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதில், 6 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா 14 மேசைகள் வீதம், மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓட்டு எண்ணும் பணியை, தலா 102 தேர்தல் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என, மொத்தம் 306 பேர் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதலாக, 306 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து, இந்திய தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் ஜோஷி. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு செயலாளர் மதுசூதன குப்தா ஆகியோர் தலைமையில், ஓட்டு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பங்கேற்றார்.

Updated On: 24 May 2024 10:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு