நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு

நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு

நாமக்கல் திருச்சி ரோட்டில், பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பது குறித்து, மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்லில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்லில், தமிழக அரசின் சார்பில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேசன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை பதிவு செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, குறைகள் உடனுக்குடன் தீர்வு செய்யப்பட்டன. இந்த பணிகளை கலெக்டர் நேரில் பர்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

முன்னதாக, நாமக்கல் - திருச்சி ரோட்டில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பணிக்கு செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story