இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி

Sri Lanka Crisis News- அவருக்கு எதிராக பொதுமக்களின் சீற்றம் இருந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Update: 2022-07-20 07:42 GMT

Sri Lanka Crisis News- பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெற்றது.

இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டலஸ் அழகப்பெருமா ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது.

அளிக்கப்பட்ட வாக்குகள் - 223

வாக்களிக்களிகாதவர்கள் - 2

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  - 4

மொத்தம் செல்லுபடியான  வாக்குகள் - 219

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று அதிபரானார் ரணில் விக்ரமசிங்க. இவர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபர் பதவியில் இருப்பார்.

டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 எம்பிக்கள் அளித்த வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர்  ரணில் விக்கிரமசிங்க,நாடாளுமன்ற அறைக்கு வெளியில்பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை முதல் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News