வார்த்தைக்கு ஏற்ற ஸ்டிக்கர் திரையாகுமாம் – வாட்ஸ் அப் அறிமுகம்

Update: 2021-06-16 02:22 GMT

தகவல் பரிமாற்றுவதற்கு முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய 2 அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்திகள் பரிமாறுவதற்கு மட்டுமின்றி புகைப்படம், வீடியோ போன்றவற்றை வாட்ஸ் அப் மூலம் மிக எளிதாக அனுப்பி/பெற்று வருகின்றனர். இந்த செயலி அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் எளிய வகையில் இருப்பதால் எளிதாக கவரப்பட்டு வருகிறது. மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது தளத்தை மேம்படுத்துவதற்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது அந்த வகையில் மேலும் இரண்டு புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்கள் பீட்டா பதிப்பு ios 2.21.120.9 மற்றும் v2.21.12.12 ஆகியவற்றில் காணப்படுகிறது. அதன்படி புதிய அம்சமாக ஸ்டிக்கர் தேடும் ஆப்ஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை வாட்ஸ் அப்பில் கீபோர்டில் ஸ்டிக்கர் ஆப்சன் ஒரு ஓரமாக இருக்கும். ஆனால் புதிய அம்சத்தில் நீங்கள் செய்தி டைப் செய்யும் பொழுது அந்த வார்த்தைக்கு ஏற்ற ஸ்டிக்கர் திரையாகும்.

இதனால் ஸ்டிக்கர் தேடுவதற்கு வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஆப்ஷனில் நெடுநேரம் வீணடிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு அம்சமாக வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் இருண்ட நீல நிறத்தில் மாற்றப்பட்டது. ஆனால் இதில் செய்திகள் தெளிவாக காணமுடியவில்லை என்று பயனர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் பச்சை நிறத்தில் மாற்றப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Similar News