ஈரநிலம் புகைப்படப் போட்டி: மாவட்ட வனத்துறை அழைப்பு

ஈரநிலம் புகைப்படப் போட்டி மாணவர்கள் பங்கேற்கலாம் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-23 07:30 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெறும் ஈரநிலம் புகைப்படப் போட்டியில் பங்கேற்க பள்ளி ,கல்லூரி, மாணவர்கள் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண் லால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வனத்துறை சார்பில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக வரும் 26-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் ஈரநிலம் தொடர்பாக மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஈர நிலம் தொடர்பான புகைப்படங்களை வரும் இருபத்தி ஆறாம் தேதி மாலை 5 மணிக்குள் என்ற  dfotvmalai@gmail.com என்ற  இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படும்,  இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News