திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் 7 வாரங்களுக்கு பிறகு இன்று நடைபெற்றது.

Update: 2022-02-28 13:08 GMT

மக்கள் குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் தடை செய்யப்பட்டது.  மேலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ,பட்டா மாறுதல், முகாம் போன்றவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இருப்பதால் மீண்டும் இன்று முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் , அதேபோல் கிராம அளவில் நடைபெறும், பட்டா மாறுதல் முகாம், மனுநீதி நாள் முகாம் ,மாவட்ட அளவிலான மற்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும் மற்றும் மாற்றுத்திறனாளி டமிருந்தும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News