வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்

வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்

Update: 2021-10-23 12:49 GMT

உபரி நீர் வெளியேறியதால் சாலையில் தேங்கியுள்ள நீர்

திருவண்ணாமலையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி இருந்த நிலையில் மீண்டும் இன்று காலை பெய்த கனமழை காரணமாக உபரி நீர் அதிகளவு வெளியேறியது.

இதனால் திருவண்ணாமலை வேலூர் சாலையில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சேரியன்தல்   கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றதால் அந்த ஏரியில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேறியது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்  வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி வெள்ளத்தை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

Tags:    

Similar News