12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா்

ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம், கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-19 00:33 GMT

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களுடைய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

12 வகையான இதர ஆவணங்கள்..

அதன்படி, ஆதாா் அடையாள அட்டை, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை,ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்காளிக்கும் ஆவணமாக பயன்படுத்தலாம். 

மேலும், இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான  பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News