திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-15 05:51 GMT

மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 66 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்தியா முழுவதும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு ஆண்டுதோறும்  அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் அந்த வாரம் தீத்தடுப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி  நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த மற்றும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் திருவண்ணாமலை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகன், நிலைய அலுவலர் கமால்பாஷா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜவ்வாதுமலை தீயணைப்பு நிலையத்திலும் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் மலர் வளையம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News