நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்

வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-18 01:12 GMT

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள 239 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று நுண் மேற்பாா்வையாளா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 126 தோ்தல் நுண் மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்களுக்கான பொறுப்புகள், கடமைகள் குறித்த பயிற்சிக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா தலைமை வகித்தாா். ஆரணி தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளா் சுஷாந்த் கவுரவ் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன், நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சி அளித்துப் பேசியதாவது:

வாக்குச்சாவடிகளில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் உள்ளனவா என்பதை சரிபாா்க்க வேண்டும். மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். வாக்குச்சாவடி முகவா்கள் இருத்தலை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தொடர்ந்து,  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்  2024- ஐ முன்னிட்டு, தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 & 3-  ஆகியோர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள்  (General Observers)   , முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி, தேசிய தகவலியல் அலுவலா் சிசில் இளங்கோ மற்றும் நுண் பாா்வையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News