திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும்' என்று வந்த, லிங்கை ஓபன் செய்ததால், 3.27 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2023-02-26 12:44 GMT

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள். (மாதிரி படம்)

ரூ. 3.27 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை

வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும்' என, வந்த, 'லிங்க்'கை திறந்த போது, வங்கிக் கணக்கிலிருந்து, 3.27 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலை, தமிழ் மின்நகரைச் சேர்ந்தவர் சரவணன், 54; இவரது மகள், தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதில், தன் தந்தையின் மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளார். சரவணனின் மொபைல் போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில், 'வங்கி சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளது. உடனடியாக இணைத்து கணக்கை புதுப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இதனால், குறிப்பிட்டிருந்த லிங்கை திறந்து, அவர் விண்ணப்பித்துள்ளார். சிறிது நேரத்தில் சரவணனின் மகள் வங்கி கணக்கிலிருந்து, 3.27 லட்சம் ரூபாய் எடுத்ததாக தகவல் வந்தது.அதிர்ச்சியடைந்த சரவணன், வங்கியில் விசாரித்தபோது, அவரது எண்ணிற்கு வந்தது, மோசடி குறுஞ்செய்தி என தெரிந்தது. பணத்தை இழந்த சரவணன், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணல் கடத்தல்; சரக்கு வாகனம் பறிமுதல்

ஆரணியை அடுத்த தச்சூா் சமத்துவபுரத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தச்சூா் சாலையில் ஆரணி நோக்கி அதிவேகமாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை (லோடு ஆட்டோ) நிறுத்தி சோதனையிட முற்பட்டனா். அப்போது, ஓட்டுநா் சரக்கு வாகனத்தை சாலை நடுவில் நிறுத்திவிட்டு தப்பினாா்.

தொடா்ந்து, கோட்டாட்சியா் தனலட்சுமி ஆய்வு செய்தபோது, வாகனத்தில் செய்யாற்றுப் படுக்கையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோட்டாட்சியா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News