திருவண்ணாமலை கால்நடை வளர்ப்பு விவசாயி உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்

மாடுகளின் இனப்பெருக்கத்தை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசின் உதவியுடன் நிறுவனம் தொடக்கம்

Update: 2022-04-16 01:48 GMT

கேட்டல் பிரீடிங் பார்மர் ப்ரொடியூசர் லிமிடெட் நிறுவனத்தை மருத்துவர் கம்பன் திறந்துவைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் 

திருவண்ணாமலையை அடுத்த அழகாநந்தல் கிராமத்தில் திருவண்ணாமலை கேட்டல் பிரீடிங் பார்மர் ப்ரொடியூசர்   லிமிடெட்    நிறுவனத்தை மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் திறந்துவைத்தார்.  பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, 

இது விவசாயிகளுக்கு முக்கிய திட்டம் ஆகும். இதன் மூலம் பல விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைவார்கள், கிராமப்புறம் மட்டுமல்லாமல் இந்த திட்டம் நகரத்திலும் செயல்படுத்த வேண்டும்.  

நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை பெருக்குவதற்கும் அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்காகவும் மத்திய அரசின் உதவியுடன் விவசாயிகளுடன் கூட்டு சேர்ந்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும். கிசான் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும், என கூறினார்.

விவசாயிகள் இந்த நிறுவனத்தில் சேரும் விண்ணப்பத்தினை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் வெளியிட சாதிக் பாஷா பெற்றுக்கொண்டார். முதல் விற்பனையை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் தொடங்கி வைக்க வழக்கறிஞர் நடராஜன் பெற்றுக்கொண்டார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிசான் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் வழங்கிட விவசாயி கலையரசி பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News