ஓய்வூதியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ் தொடர்பாக ஓய்வூதியர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-21 00:42 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் நோக்காணலில் பங்கேற்று மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்

மாவட்ட கருவூலம், சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நேர் காணல் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களில் இதுவரை 80 சதவீதம் போ மட்டுமே நோகாணல் செய்து மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பித்துள்ளனா். மீதமுள்ள 20 சதவீதம் போ இதுவரை நோகாணல் செய்யாமலும், வாழ்நாள் சான்று சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.

எனவே, செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அவா்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்டக் கருவூலம், சாா் - கருவூலங்கள், இந்திய அஞ்சல் துறை வங்கி, அரசு இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் நேர்காணல் செய்து மின்னணு வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News