திருவண்ணாமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Update: 2022-05-05 06:55 GMT

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது.

தமிழகத்தில் மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ம் தேதி வரை பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 29,415 மாணவ மாணவியர் இன்று பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதில்  14 ஆயிரத்து 503 மாணவர்கள் 14 ஆயிரத்து 912. மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 415 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு ஆசிரியர்கள் பறக்கும் படையினர் என சுமார் 1,900 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்த தேர்வு மையங்கள் 120 அமைக்கப்பட்டுள்ளது. ஆரணி கல்வி மாவட்டத்தில் 21 பிளஸ் டூ பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியைகள் வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்   திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

Tags:    

Similar News