மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டம்.

Update: 2022-07-27 01:37 GMT

குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா நாறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், கூலி தொழிலாளி. இவரது மனைவி தீபா, மாற்றுத் திறனாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தீபா, தனது கணவர் மற்றும் மகள்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தீபா கையில் நீதி வேண்டும் என்று பதாகையை ஏந்தியபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு நிலமோ, வீடோ எதுவும் கிடையாது. முன்னாள் கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இதில் பசுமை வீடு கட்டி வருகிறோம். வீடு கட்டுமான பணி முடியாத நிலையில் அருகில் உள்ளவர்கள் எங்கள் வீட்டுமனையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து கோட்டாட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மன உளச்சலில் உள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்று கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News