திருவண்ணாமலையில் தூய்மைப் பணியாளர்கள் மாநில சங்க மண்டல மாநாடு

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பவர்பம்பு இயக்குபவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மாநில சங்க மண்டல மாநாடு நடந்தது.

Update: 2022-03-21 06:42 GMT

தூய்மைப் பணியாளர்கள் மாநில சங்க மண்டல மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது.

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பவர்பம்பு இயக்குபவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மாநில சங்க மண்டல மாநாடு இன்று திருவண்ணாமலையில் நடந்தது.திருவண்ணாமலை மாவட்ட தலைவர் குப்பன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம் மாவட்ட தலைவர் கருணாநிதி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை ஒன்றிய நிர்வாகி முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் வீராசாமி, மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, மாநில பொருளாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பவர்பம்பு இயக்குபவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

10.5.2020-க்கு பின்னர் பணிநியமனம் செய்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பவர்பம்பு இயக்குபவர்களுக்கு ஊராட்சி பொது நிதியில் ஊதியம் வழங்குவதை மாற்றி பணியாளர் ஊதிய கணக்கில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணை வழிகாட்டுதலின்படி 1.11.2017 முதல் பணி வரன்முறைப் படுத்தப்பட்டு ஊதியம் வழங்கிவரும் விகிதப்படி அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்துவரும் தூய்மைக் காவலர்களுக்கு நேரடியாக ஊராட்சியில் பணி ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News