அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் 35 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-03 01:44 GMT

 மீன்கள் மொத்த விற்பனை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

திருவண்ணாமலை நகர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களும், கெட்டு போன மீன்களும் விற்பனை செய்வதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்து உள்ளது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வேலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தலைமையிலான அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, சிவபாலன் ஆகியோருடன் திருவண்ணாமலை நகராட்சியில் தண்டராம்பட்டு சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலையில் செயல்பட்டு வரும் மீன்கள் மொத்த விற்பனை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், கெட்டு போன மீன்கள் உள்ளதா என்றும், மீன்கள் மீது பார்மலின் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் மீன் கடைகள் நடத்த உரிமம் பெறப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கெட்டுப்போன மீன்கள் 18 கிலோ, ஆப்பிரிக்கன் கெளுத்தி மின்கள் 35 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News