திருவண்ணாமலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்று நடும் விழா: நீதிபதி எம்.கே.ஜமுனா பங்கேற்பு

திருவண்ணாமலையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் நீதிபதி எம்.கே.ஜமுனா பங்கேற்றார்.

Update: 2022-06-08 06:57 GMT

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எம்.கே.ஜமுனா.

திருவண்ணாமலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. 

மரக்கன்று நடும் விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் வரவேற்றார்.இதையடுத்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எம்.கே.ஜமுனா தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எம்.கே.ஜமுனா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பார் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன், லாயர் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர் பழனி, மூத்த வழக்கறிஞர் பாபு உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News