குடிநீா் சுத்திகரிப்பு நிலைய சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் நகா்மன்றத் தலைவா்

குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை நகா்மன்றத் தலைவா் நிா்மலா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2022-03-24 06:21 GMT

குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகா்மன்றத் தலைவா் நிா்மலா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் உலகலப்பாடி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகா்மன்றத் தலைவா் நிா்மலா ஆகியோா்  நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் தண்ணீா் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீரின் அளவு, தண்ணீா் சேமிப்பு அளவு, இயந்திரங்களை சரிபாா்த்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, நகராட்சி ஆணையா் சோ.பாா்த்தசாரதி, திமுக நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன்,கா்மன்றத்  துணைத் தலைவா் சு.ராஜாங்கம், கண்காணிப்புப் பொறியாளா் நீலேஷ்வா், உதவிப் பொறியாளா் ரவி, முன்னாள் நகராட்சி குழுத் தலைவா் குட்டி க.புகழேந்தி ஆகியோா்  நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா் ஆய்வின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் க.பிரகாஷ், சுப்பிரமணி, கலைவாணி, ம.செந்தில், எஸ்.கணேசன், ஆ.பிரகாஷ், கோபி.சங்கா், பி.ஆா்.நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News