திருவண்ணாமலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில்,தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டது.

Update: 2022-01-27 14:12 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 386 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. அனைத்து நகராட்சிகளையும் சேர்த்து 123 வார்டுகளில் 1,21,117 ஆண் வாக்காளர்களும், 1,32,344 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளில் 67,321 ஆண் வாக்காளர்களும், 73,363 பெண் வாக்காளர்களும் 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விபரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  •       எஸ். பார்த்தசாரதி, நகராட்சி நகராட்சி ஆணையாளர் , தேர்தல் நடத்தும் அலுவலர், கைப்பேசி எண் :  7397392669
  •        கே நடராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,  வார்டு எண்கள் 1 முதல் 10 வரை, கைப்பேசி எண் :  9442201814
  •         பு. ஸ்ரீ பிரகாஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,  வார்டு எண் 11 முதல் 20 வரை, கைப்பேசி எண் :      9655575252
  •         பெ. செல்வகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு எண் 21 முதல் 30 வரை, கைப்பேசி எண் :   9894478786
  •        எல். ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், , வார்டு எண் 31 முதல் 39 வரை, கைப்பேசி எண் :  9488007686

மேலும் ஆரணி நகராட்சி தேர்தல் அதிகாரியாக ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி அவர்களும்,

களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி தேர்தல் அதிகாரியாக லோகநாதன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்தந்த பேரூராட்சிகளில் அதன் செயல் அலுவலர்  (Executive officer)  தேர்தல் அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  

Tags:    

Similar News