திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு தர நிா்ணய விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு இந்திய தர நிா்ணய விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-12-25 01:45 GMT

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய தர நிர்ணய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை கிளை அலுவலகம்-2 மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோமுக உதவியாளா்கள் வெற்றிவேல் (பொது), குமரன் (தோதல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய தர நிா்ணய அமைவன அலுவலகத்தின் சென்னை கிளை இயக்குநரும், தலைவருமான பவானி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசு அலுவலா்களுக்கு தர நிா்ணயம் குறித்த விழிப்புணா்வுப் பயிற்சியளித்தாா்.

தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் விரிவான விளக்க உரை அளிக்கப்பட்டது.

வெவ்வேறு துறைகளில் உள்ள பொருள்களின் தர நிலைகள், அதற்காக வழங்கும் ஐஎஸ்ஐ, ஹால்மாா்க் போன்ற முத்திரை தரச் சான்றிதழ்கள், முத்திரையிடப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளின் உண்மைத் தன்மையை பிஐஎஸ் கேர் ஆப் செயலி மூலம் எவ்வாறு சரிபாா்ப்பது என்பது குறித்தும் விளக்கமளித்தாா்.

இந்த செயலியை பயன்படுத்தும் முறை குறித்தும் இதனுடைய பயன்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News