அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் , அருணை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Update: 2021-12-11 13:11 GMT

சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி   தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.   

தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி விழாவினை  துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். இம்முகாமில் 21,647 நபர்கள் கலந்து கொண்டனர்.  அதில் 2,647 நபர்கள் பணி நியமன ஆணை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீரராகவராவ்,  இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் அனிதா, அருணை கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர்  கம்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News