திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி

உணவு பாதுகாப்புத் துறை சார்பில், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Update: 2021-07-29 02:59 GMT

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் புகையிலை பொருட்கள் ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடந்த உறுதிமொழியேற்பில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், துறை அலுவலர்கள், அனைத்து வணிகர்கள் மற்றும் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில், அரசின் உத்தரவின் படி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய்புண், குடல் புண் மற்றும் புற்று நோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருட்களாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருட்களை தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துச் செல்லவோ. விநியோகிக்கவோ, சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்னே எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தை சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரிவோம் என உளமார உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News