கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Update: 2021-11-18 11:12 GMT

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி திருவிழா நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமில்லாமல், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில், கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், 15 ஆயிரம் பேர் வெளியூர் பக்தர்கள், 5 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது..

ஆனால், மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை, கோவிலுக்குள் கட்டளைதாரர்கள் 300 பேர் மட்டும் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது  

Tags:    

Similar News