அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

Update: 2022-03-01 01:38 GMT

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா  ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று அதிகாலை தொடங்கியது.

சிவராத்திரியை ஒட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணி முதல் மூலவர் சந்நிதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது.  மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கும்.

இரவு 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூலகருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கும். இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில், இரவு பன்னிருதிருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, பரத நாட்டியம், சொற்பொழிவு என, பல்வேறு நிகழ்வு நடக்கிறது.

இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.. இதனால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.  ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News