திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதி மன்றங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வருகின்ற 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

Update: 2021-08-31 07:36 GMT

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வருகின்ற 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான திருமகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி செப்டம்பர் 11ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. சாலை விபத்து,  இழப்பீடு கோரி தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் கல்விக் கடன் , வங்கி கடன்  சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் வழக்காடி நேரடியாக பங்கு பெற்று சமாதானமாகவும் விரைவாகவும் வழக்கை முடித்துக் கொள்ளலாம். இழப்பீட்டு தொகை பிற பிரச்சனைகளை இரு தரப்பினர் சம்மதத்துடன் தீர்க்கவும் மக்கள் நீதி மன்றங்கள் வழிவகை செய்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News