வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த இஸ்லாமியா்கள் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த இஸ்லாமியா்கள் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-12 07:44 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியா்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரிவோர் 50 சதவீத மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியா்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆகவிரியா்கள், ஆசிரியைகள், பிலால்கள் மற்றும் இதரப் பணியாளா்கள், தா்க்காக்கள் மற்றும் அடக்கத்தலங்கள், தைக்காக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்களில் பணிபுரியும் முஜாவா் உள்ளிட்டப் பணியாளா்களுக்கு மானிய விலையில் 125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனம் வாங்க வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இஸ்லாமியா்களின் பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பணியாளா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால், உரிய விண்ணப்பங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்.மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News