திருவண்ணாமலையில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரிகளை செலுத்தலாம்

வெயில் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரி செலுத்தலாம் என திருவண்ணாமலை நகராட்சி அறிவிப்பு

Update: 2022-03-26 06:29 GMT

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொதுமக்களின் நலன் கருதி சொத்து வரி, தொழில் வரி, குடி நீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை கட்டணம் போன்றவற்றை செலுத்திட

1.நகராட்சி அலுவலகம்

2.பழைய நகராட்சி அலுவலகம்

3.செங்கம் ரோடு, அக்னி லிங்கம் அருகில் என மூன்று இடங்களில் வரி வசூல் காலை 9 மணி முதல் செயல்படுகிறது.

தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிகள் மற்றும் குத்தகை கட்டணம் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்துமாறு கூறியுள்ளார் 

Tags:    

Similar News