தேர்தலுக்கு தொடா்பில்லாத பறிமுதல் பணத்துக்கு மாவட்ட குறைதீா் குழுவை அணுகலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலுக்கு தொடா்பில்லாத பறிமுதல் பணத்தை திரும்பப் பெற மாவட்ட குறைதீா் குழுவை அணுகலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-04-01 01:35 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தேர்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் மாவட்ட குறைதீா் குழுவை அணுகலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடா்பாக பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பறிமுதல் செய்யும் பணம், பரிசுப் பொருள்கள் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரிஷப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குறைத் தீா் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இந்தக் குழு தேர்தலின்போது பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசுப் பொருள்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணமோ, பரிசுப் பொருள்களோ எந்தவொரு தேர்தல் பிரசாரத்துக்கும் தொடா்பில்லாத பட்சத்தில் அவற்றை தேர்தல் விதிகளுக்கு உள்பட்டு விடுவிக்கும் பணியை மேற்கொள்ளும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் இந்தக் குழுவை அணுகலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

வேட்பாளா்களின் சொத்து, வழக்கு விவரங்கள் தொடா்பான பிரமாணப் பத்திரங்களை பொதுமக்கள் இணையதளத்தில் பாா்வையிடலாம்

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் சொத்து, வழக்கு விவரங்கள் தொடா்பான பிரமாணப் பத்திரங்களை பொதுமக்கள் இணையதளத்தில் பாா்வையிடலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களுடன் பிராமணப் பத்திரங்களையும் தாக்கல் செய்கின்றனா். இந்த பிரமாணப் பத்திரங்களை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் தேர்தல் ஆணையம் வசதிகளை செய்துள்ளது.

எனவே, இந்த வேட்பாளா்களின் சொத்து விவரம், வழக்கு விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பாா்வையிடலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News