திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் எவ வேலு இன்று திறந்து வைத்தார்

Update: 2021-07-27 08:29 GMT

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். 

திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு  அமைச்சர் எ.வ.வேலு, துவக்கி வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு அரசு உதவி பெறும் விண்ணப்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச நூலகம், இலவச நகலகம் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பெரிய தெருவில் மாணவர்களுக்கு இலவச கணினி மையம், மகளிர்களுக்கு தையல் பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பின் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்கள். அதனை தொடர்ந்து மகளிருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கினார்.

Tags:    

Similar News