திருவண்ணாமலையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், எ.வ. வேலு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்கள்

Update: 2021-07-05 17:09 GMT

திருவண்ணாமலையில் பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், செயற்கை கால் ஆகிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

தற்போது திருவண்ணாமலையில் காமராஜர் சிலை அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனையை மேம்படுத்தி 380 ஆக்ஸிஜன் படுக்கைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து வேங்கிக்கால் ஹரிஹரன் மகாலில் covid- 19 தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து, பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆய்வு செய்தார்கள். மூன்றாவது அலை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் வார்டு ஆகியவற்றை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், செயற்கை கால் ஆகிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏழை எளியோருக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கி, 36 லட்சம் மதிப்பிலான மருத்துவ பல்நோக்கு வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் covid-19 நோய் தடுப்பு குறித்து திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ நிர்வாகத்தினரிடம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News