அரோகரா கோஷம் விண்ணை பிளக்க கார்த்திகை மகா தீபம்

அரோகரா கோஷம் விண்ணை பிளக்க ஆண்டிற்கு ஒருமுறை ஒரு நிமிடம் பக்தர்களிடையே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த நடனமாடி காட்சியளித்தார்

Update: 2021-11-19 13:15 GMT

அர்த்தநாரீஸ்வரர்

அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 

பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள்,முன்னாள் நீதிபதிகள்,  காவல்துறையினர் அவர்களது உறவினர்கள் மட்டுமே கோயிலில் தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது.

இந்நிலையில் தற்போது 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டிற்கு ஒருமுறை ஒரு நிமிடம் பக்தர்களிடையே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பெருமான் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags:    

Similar News