100 நாள் வேலை திட்டத்தில் தனிநபர் பணிகளில் பயன் பெற அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் பணிகள் மேற்கொண்டு பயன் பெற மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-07 01:13 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய மற்றும் தனிநபர் பணிகள் மேற்கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய மற்றும் தனி நபர் பணிகளுக்கான பண்ணை குட்டைகள், மான் வரப்பு, கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலை செடிகள் வளர்த்தல், நாற்றங்கால் அமைக்கும் பணிகள் மற்றும் தனிநபர் நிலங்களில் பழவகை மரங்கள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் சிறு மற்றும் குறு விவசாயி சான்று நகல், நில உடமைக்கான ஆவண நகல், இலகு மக்கள் பட்டியல் எண், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வேலை அடையாள அட்டை நகல், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News