திருவண்ணாமலை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை நகராட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

Update: 2022-03-30 01:52 GMT

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் 

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நகராட்சித் தலைவர்கள் , உறுப்பினர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடை பெற்றது.

மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .

அப்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சரிவிகித உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் நலனில் கவனம் செலுத்துதல் குறித்து விளக்கப்பட்டது.

இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, குறித்து தெரிவிக்கப்பட்டது. வாடகை கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நகராட்சித் துணைத் தலைவர் ராஜாங்கம், நகர நல அலுவலகம் மோகன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News