திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

Update: 2022-01-02 13:48 GMT

திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர்

மார்கழி மாத மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை திதியன்று வரும் அனுமன் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தர்கள் வடை மாலை,  துளசி மாலை , மலர் மாலைகள் அணிவித்து சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்கள் மற்றும் பிரதான கோயில்களில் உள்ள சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News