திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

Update: 2021-12-20 23:30 GMT

முகாமில், பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டியை வழங்கிய கலெக்டர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடம்ம்  இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை,  அவர் நேரில் பெற்று கொண்டார்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 706 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் வழங்கி, அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நிலுவையில் உள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை தொடர்பான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டியை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதா்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப்,  தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன்,    பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதாலட்சுமி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News