இளைஞர்களுக்கு மத்திய மாநில அரசின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்

திருவண்ணாமலையில் இளைஞர்களுக்காக மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் இலவச திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் தொடங்கவுள்ளது

Update: 2021-09-28 08:17 GMT

மத்திய மாநில அரசின் உதவி தொகை, வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவியுடன் கூடிய முற்றிலும் இலவசமான பயிற்சிகள். திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு. மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி தற்போது திருவண்ணாமலையில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து  டிரஸ்ட் மேலாளர் கூறுகையில்

இதில், தையல் பயிற்சி, செல்போன் ரிப்பேர் செய்யும் பயிற்சி, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சி, elactrician பயிற்சி, நர்சிங் பயிற்சி போன்றவைகள் கொடுக்கப்பட உள்ளது.  இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு,  பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள், மாணவிகள் சேரலாம். வயது வரம்பு 18 முதல் 45 க்குள், அனைத்து இன மாணவர்களும் சேரலாம்,

அந்தந்த பயிற்சிக்கு ஏற்றவாறு (500 ரூ முதல் 6000 ரூ வரை ) மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.  இந்த பயிற்சி மத்திய மாநில அரசுகளால் முழுவதுமாக இலவசமாக நடத்தும் பயிற்சியாகும். 

தற்போது பயிற்சிகள் தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் விரைந்து இதில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, GREEN LAND TRUST. 31 /11, Gandhi Nagar 4வது தெரு, திருவண்ணாமலை. தொடர்புக்கு:. 9443435754, 8754574252, இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் இந்த தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்..

எடுத்து வர வேண்டியவை (3 செட்): ஆவணங்கள். 1. ஆதார் அட்டை. 2. மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ்  3. வங்கி கணக்குப்புத்தகம் 4. ஆறு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்                                                                  

Tags:    

Similar News