வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-22 02:07 GMT

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்கள் திறன் திருவிழா வருகிற 27ஆம் தேதி காலை 9 மணி முதல் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு வாகனத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

மேலும் இம்முகாம் குறித்து கூறுகையில் இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 7000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர் எனவே இளைஞர்கள் இளம்பெண்கள் இந்த முகாமினை பயன்படுத்தி வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் வேலைவாய்ப்பு ஜோதி, உதவிய இயக்குனர் காந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோக லட்சுமி , மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையது சுலைமான், உதவி திட்ட அலுவலர் சந்திரகுமார், உதவி திட்ட அலுவலர் ஜான்சன் ,இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News