வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவால் பெண் தீக்குளிக்கமுயற்சி

வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவால் பெண் தீக்குளிக்கமுயற்சி

Update: 2021-04-12 09:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா பெரியார் சாலையைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரதராஜ் என்பவருடன் திருமணமாகி விக்னேஷ் சண்முகம் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் வரதராஜன் தாயார் முத்தம்மாளும் உடன் வாழ்ந்து வருகின்றனர். திருமணம் ஆன நாள் முதல் வரதராஜன் அவரது தாயார் முத்தம்மாளும் சேர்ந்து வள்ளியம்மாளை வரதட்சணைக் கேட்டு அடித்து உதைத்து சித்திரவதை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் வள்ளியம்மாள் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள சுங்குவார்சத்திரம் அருகில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  அதே கம்பெனியில் பணிபுரியும் சேத்துபட்டு லூர்து நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருடன்  தினந்தோறும் ஒரே வேனில் வேலைக்கு போய் வந்திருக்கிறார்.  கடந்த ஓராண்டு காலமாக ஜெய்சங்கர் மற்றும் ஜெய்சங்கரின் சித்தப்பா ஆபேல் இருவரும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியபோது அவர்களும் அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் செய்வதறியாமல் அவரும் அவரது பிள்ளைகளும் பசியுடன் பல நாட்கள் பட்டினியாக இருந்துள்ளனர். தொடர்ந்து அவரது கணவரும் மாமியாரும் துன்புறுத்தி வந்துள்ளனர்.. மேலும் ஜெய்சங்கர் ஜெய்சங்கரின் சித்தப்பா ஆகியோர் துன்புறுத்துவதாக பலமுறை சேத்பட் காவல் நிலையம் சேத்பட் மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களில் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஜெய்சங்கர் வழியில் மடக்கி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இவர்கள் அனைவரின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் தனது வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று நினைத்து வாழ வழியின்றி தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த வள்ளியம்மாள் மண்ணெண்ணையை தனது பிள்ளைகள் மற்றும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News