கிரிவலம் வர வேண்டாம்; திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-07-21 07:09 GMT

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேகரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. பவுர்ணமி நாட்களில் இங்குள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில், பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வலம் வருவார்கள்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31 ம் தேதி காலை 6  மணி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இம்மாதம் 23 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காைல 10.38 முதல்  24 ம் தேதி (சனிக்கிழமை) காைல 8.51  வரை, மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News