மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தயார் நிலையில் சக்கர நாற்காலிகள்

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இருசக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

Update: 2024-04-11 09:14 GMT

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இருசக்கர நாற்காலிகள் வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இருசக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக, 1,314 இரு சக்கர நாற்காலிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தலுக்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,314 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக ஒரு மையத்துக்கு தலா ஒரு இரு சக்கர நாற்காலி என மொத்தம் 1,314 இரு சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த இரு சக்கர நாற்காலிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இந்த இரு சக்கர நாற்காலிகளும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ,வாக்குச்சாவடி அலுவலர்கள் , வருவாய் கோட்டாட்சியர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News