சிறப்பாக புலனாய்வு செய்த காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல்துறையினரை டிஜிபி பாராட்டினார்

Update: 2022-03-19 01:27 GMT

 திருவண்ணாமலை மாவட்டத்தில் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல்துறையினரை டிஜிபி பாராட்டினார்

செங்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 3 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அப்போதைய கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் தற்போது ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

ஜமுனாமரத்தூர், வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, வயது 40 என்பவர் கடந்த 12.07.2018 ஆம் தேதி காணாமல் போனதாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து காணாமல் போன திருப்பதியை கொலை செய்த பலாக்கானூர் கிராமம் மணி @ ராமசாமி, என்பவரை கைது செய்தனர். 

கடலாடி காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மாக்கில் வழிப்பறி செய்த வழக்கில் மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

திருவண்ணாமலை தென்றல் நகரில் கடந்த 20.10.2021 ஆம் தேதி வீட்டை உடைத்து திருடிய வழக்கில் அப்போதைய கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் தற்போது கடலாடி காவல் ஆய்வாளர் R.லட்சுமிபதி தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து திருடுபோன 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் காவலர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்..ஆனி விஜயா,திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News