திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

Update: 2021-11-04 01:25 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தீபாவளி தொடர்  விடுமுறை விடப்பட்டு உள்ளதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலேம கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகின்றனர்.  அண்ணாமலையார் திருக்கோயில் , கிரிவலப் பாதை அனைத்து ஆசிரமங்கள் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

Tags:    

Similar News