பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலை துவக்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-10 12:07 GMT

பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை, இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000/-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினையும் மற்றும் இலவச வேட்டி, சேலைகளையும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாந்தம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவிக்கையில் ,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா "பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000/-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம்" ஆகியவை கொண்ட "பொங்கல் பரிசு தொகுப்பு" வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1112 இலங்கை தமிழர் மறுவாழ்வு குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 107 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அதற்காக, மாவட்டத்தில் உள்ள 1,643 ரேஷன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.

மேலும், நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளிடம் இருந்து பனிக் கரும்பு கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதையொட்டி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ெசங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

10ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. எனவே, அப்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, எந்த நாளில், எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன் முன்கூட்டியே வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. இப்பணியில், சம்மந்தப்பட்ட ரேஷன் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கார்டு எண் மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் உள்ளிட்ட விபரங்கள், சம்மந்தப்பட்ட ரேஷன் கடை தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

Tags:    

Similar News